( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்வியமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவு ஒழுங்கு செய்துள்ள இரண்டாம் தேசிய மொழி மதிப்பீட்டு திட்டத்தின் கீழான சிங்கள மொழித்தின தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ள கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி மாணவர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு அல் இக்பால் மகா வித்தியாலயத்தில் இடம்பெறும் இப் போட்டியில் மொழிப் பிரயோகமும் கிரகித்தலும் எனும் தலைப்பில் தரம் 6 ஐச் சேர்ந்த முஹம்மது நபார் நபீஸ் மற்றும் தரம் 9 ஐச் சேர்ந்த முஹம்மது மஸ்ஹுல் முஹம்மது ஸபிஹார் ஆகியோர் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்விரு மாணவர்களையும் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரியில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோரும் கல்லூரியின் சிங்கள பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியையுமான திருமதி .ஏ.எஸ்.சபீனா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top