பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடக உத்தியோத்தராக கல்முனயைச்சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.பி.எம்.அஸ்ஹர் நியமிக்கப்பட்டுள்ளார் அம்பாரை மாவட்ட திட்டமிடல்செயலகம் சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பிரதேச செயலகங்களில் திட்டமிடல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தராகக்கடமையாற்றிய இவர் ஊடகத்துறையிலும் பிரபலமானவர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்பட்ட எழுத்துப்பரீட்சை மற்றும்நேர்முகைப்பரீட்சைகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் இவர்தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இதற்காக 345பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 30பேர் எழுத்துப்பரீட்சை மற்றும் நேர்முகைப்பரீட்சைகளுக்கும் அழைக்கப்பட்டிருந்தனர்.,இதில் 5 பேர்தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஐந்து உத்தியோகத்தர்களில் ஒரேயொரு தமிழ்பேசும் உத்தியோகத்தர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top