"இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால சவால்களுக்கு உலமாக்கள் எவ்வாறு முகம் கொடுப்பது" எனும் தலைப்பிலான முழுநாள் கருத்தரங்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கென நடத்தப்பட்டது. 

அம்பாறை மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சாய்ந்த மருது பரஸ்டைஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முழுநாள் கருத்தரங்கில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 ஜம் இய்யத்துல் உலமா கிளைகளைச் சேர்ந்த 100 உலமாக்கள் கலந்துகொண்டனர். 

அம்பாறை மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க். எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், ஓட்டமாவடி தாஜுஸ் ஸலாம் இஸ்லாமியக் கலாபீட அதிபர் அஷ்ஷெய்க். எம்.பி.இஸ்மாயில் (மதனி), ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க். ஏ.எல்.பீர்முகம்மது (காஸிமி) ஆகியோர் பிரதம வளவாளர்களாகக் கலந்துகொண்டதுடன், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்.இஸட்.எம்.நதீர் "மக்களைக் கவரும் விதத்தில் எமது பிரசாரப் பணி எவ்வாறு அமைய வேண்டும்" எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினார். 

ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்று உறுப்பினர் அஷ்ஷெய்க்.எப்.எம்.அன்ஸார் மௌலானா கருத்தரங்கு நிகழ்வுகளை ஒழுங்கமைத்தார். "சமகாலத்தில் நாட்டில் முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய உலமாக்கள் பிரச்சினைகளுக்கான காரணிகளை இனம் காணவேண்டும்" என கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தலைவர் அஷ்ஷெய்க்.எஸ்எச்.ஆதம்பாவா (மதனி) கூறினார்.  

கருத்துரையிடுக

 
Top