திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐ.அலியார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் மாவட்ட உள்ளக கணக்காய்வாளராகவும், சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளராகவும் கடமையாற்றியவர். இவரின் தொழில் திறமைக்கு சமுர்த்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்தினால் மாவட்ட சமுர்த்தி இணைப்பாளராக இவர் பதவி உயர்வு பெற்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றியவர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீPழுள்ள திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளராக ஐ.அலியார் கடந்த மாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர். அம்பாறை மாவட்டத்தில் சமுர்;த்தி திட்டத்தை வெற்றிகரமான முன்கொண்டு செல்வதற்கு அளப்பெரிய பங்களிப்பு செய்தவர். மாவட்டத்தில் கடமையாற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களினதும், முகாமையாளர்களினதும் நலன்களில் அக்கறை கொண்ட ஒரு உயர் அதிகாரியுமாவார்.

சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர் இவர். அனர்த்தங்களின் போதும், ஏனைய பொதுவிடயங்களிலும் சாய்ந்தமருது மக்களுக்காக கிழக்கு நட்புறவு அமைப்பினூடாக சேவையாற்றியவர்.

இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த சீ.இப்றாஹிம் மற்றும் எம்.ஐ.ஆசியாஉம்மா தம்பதிகளின் புதல்வருமாவார்.

கருத்துரையிடுக

 
Top