அண்மைக் காலமாக பல நுண்கடன் தனியார்  கம்பனிகளின் மூலமாக வறுமைக்குட்பட்ட மக்களது வாழ்வாதார மேம்பாட்டை ஊக்குவித்தலில் வழங்கிவரும் நுண்கடன் நிதியினால் மக்கள் சரியாக முன்னறிவு  இல்லாமல் பல பாதகமான விளைவுகளை எதிர்நோக்குகின்றனர்  இது தொடர்பான தெளிவுபடுத்தும் இரண்டு நாள் பயிற்சிபட்டறை மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்  அமைப்பின் ஏற்பாட்டில் மன்ரேசா பயிற்சிநிலையத்தில்  நேற்று  (10) அமைப்பின் நிர்வாக பிரிவு முகாமையாளர் என்.மனோகரன் தலைமையில் நடை பெற்றது .
இவ்விரண்டு நாள் பயிற்சிப்  பட்டறையின் ஆரம்பநிகழ்வின் அமைப்பின் இயக்குனர்  ஜிரோன் டிலிமா,உத்தியோகத்தர்களான கிருஸ்டி மற்றும் மைக்கல்  ஆகியோர்  கலந்துகொண்டதுடன் வளவாளராக மகாசக்தி அமைப்பின் வளவாளர் எஸ்.சொர்ணலிங்கம் மற்றும் ஆ.அசோகா அத்துடன் ஆலோசகர் பீ .தங்கவேல் ஆகியோர்  கலந்துகொண்டுசமூகத்தின் மத்தியில் நுண்கடன் நிதி வசதியின் மக்கள்  எதிர் நோக்கும் பிரச்சினைகள் ,நுண்கடன் திட்டத்தின் கொள்கைநடைமுறைகள் போன்றவிடயங்கள் தொடர்பாக பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

 
Top