ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெறும் வேளை அங்கு உரையாற்றும் போதே சபை முதல்வரான நிமல் சிறிபால.டி.சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு மூன்றாவது தடவை போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி உயர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கான உயர் நீதிமன்ற பதில் நேற்று அவரிடம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

 
Top