டீன் பைறுாஸ்-

புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லா பாலர் பாடசாலையின்   நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  03 திங்கட் கிழமை மேற்படி பாலர் பாடசாலையின் தலைவரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  எச்.எம்.எம்.பாக்கீர்   தலைமையில் நடைபெற்றது. பிரதம 
அதிதி யாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் கலந்து கொண்டு  அடிக்கல் நட்டு வைத்தார் .
புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் கட்டிடத்தில் சுமார் மூன்று வருடங்களாக இயங்கி வரும் மேற்படி பாலர் பாடசாலையானது போதிய இடவசதியின்றி பல சிரமங்களுக்கு மத்தியில் மிக சிறப்பாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேற்படி பாலர் பாடசாலைக்கான ஓர் நிரந்தர இடம் இல்லாததினை பாடசாலை நிர்வாகம்  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய  அமைச்சரினால் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் கடற்கரை வீதி கட்டிடத்தொகுதி அருகில் பாடசாலைக்கான நிரந்தர இட ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் அமைச்சரினால் இருபது இலட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டதாக பாலர் பாடசாலையின் தலைவரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  எச்.எம்.எம்.பாக்கீர்  தெரிவித்தார்.கருத்துரையிடுக

 
Top