ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கல்முனைத் தொகுதி அமைப்பளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். றியாஸின் அழைப்பின் பேரில், இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்‌ஷ (பா.உ) அவர்கள் எதிவரும் 13ம் திகதி கல்முனைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவ்விஜத்தின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், தாய்நாட்டைக் காக்கும் நீல அலை வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளார்.
இதற்கான முன்னோடி வேலைகள் இன்று உத்தியோக பூர்வமாக கல்முனைத் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கல்முனைத் தொகுதி அமைப்பளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். றியாஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது நீல அலை வேலைத் திட்டத்தில் இணையவுள்ள இளைஞர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகிக்கப்பட்டதுடன் அவர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது.


கருத்துரையிடுக

 
Top