அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும்  இன்று கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ் இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் பிரதம அதிதியாகவும் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழக செயலாளர் எஸ்.ரீ.பஸ்வாக் , விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் எஸ்.எம்.எம்.பளீல் , கல்முனை பிராந்திய பத்திரிகை முகவர் முஹம்மட் ஹனீபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் முஸ்லிம் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் அனைவருக்கும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லா அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார்.
அத்துடன் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டவர்களை சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .
புதிய நிருவாக சபை தெரிவில் மீண்டும் சம்மேளன தலைவராக மீரா இஸ்ஸதீனும் , செயலாளராக ரீ.கே.ரஹ்மத்துல்லாவும் , பொருளாளராக யு.முஹமது இஸ்ஹாக்  ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் 
அத்துடன் இன்று நடை பெற்ற சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் மரணித்த ஊடகவியலாளர்களான பொத்துவில் இப்ராஹீம் , சாய்ந்தமருது அலியார் முசம்மில்  மற்றும் ஊடகவியலாளர் நற்பிட்டிமுனை முஜாஹிதுடைய  புதல்வி ஆகியோருக்கு விசேட துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தப் பட்டது 

புதிய நிர்வாகிகளின் முழு விபரம் வருமாறு

தலைவர் – மீரா எஸ். இஸ்ஸடீன்.
உபதலைவர்கள் –ஏ.எல்.எம்.சலீம், யு. சம்சுதீன் (மிஸ்கீன்)
செயலாளர் – ரி.கே றஹ்மத்துல்லாஹ்.
உப செயலாளர்கள் –எஸ்.நடனசபேஷன், எஸ்.எல். முனாஸ்.
பொருளாளர் –யு.எம்.இஷ்ஹாக்.
கணக்காய்வாளர் – எம்.ஐ.எம். ஆரிப்.

நிர்வாக சபை உறுப்பினர்கள் – ஐ.எல்.எம்.றிஸான், பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.புஹாது, ஆர்.தில்லைநாயகம், எஸ்.சிராஜுதீன், எம்.ஐ. சம்சுதீன், எஸ்.எல்.எம்.பிக்கீர், யு.எல்.எம்.றியாஸ், எம்.எஸ்.ஷரிபுத்தீன்.

ஆலோசனை சபை உறுப்பினர்கள் –எம்.ஏ. பகுர்தீன், எம்.சஹாப்தீன், எம்.எல்.எம்.ஜமால்டீன் ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.


கருத்துரையிடுக

 
Top