சாடுகிறார் உதுமாலெப்பை -மாகாண   அமைச்சர் 
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை என்று வெறும் பாசாங்கையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை செய்து வருகின்றது' என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

'எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரித்து நிற்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது' என்றும் அவர் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(12) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.  

'இவ்வாறான செயற்பாடுகளினூடாக ஆளும் அரசாங்கத்திடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்ளலாம் என்பதே அவர்களின் கனவாகும்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு அரசாங்கம் வரிந்துகட்டிக் கொண்டு நிற்கையில் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துமாறு இத்தலைமை அறிக்கைவிடுவது யாவருக்கும் புரியாத புதிராக இருக்காது என நினைக்கின்றேன்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு ஜனாதிபதிக்கு எதிராக எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளருக்கு பிரசாரம் செய்ய முடியாது.

இதேவேளை, தானாக தமது அமைச்சுப் பதவியை துறந்து விட்டும் எதிரணிக்காக பிரசாரம் செய்யும் நிலையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இல்லை' என்று கூறினார். 

கருத்துரையிடுக

 
Top