(ஹாசிப் யாஸீன்)  
கல்முனை சாஹிபு வீதியின் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்குமாறு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  ஜீ.பிரேமசிறி மகநெகும நிறுவனத்தின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இவ்வீதியின் அபிவிருத்திப் பணி தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் மூக்கை நுளைப்பது கவலையளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஊடகப் பிரிவு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதானது,


பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்த வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் 4 கோடியே 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை சாஹிபு வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்பிக்கப்பட்ட இவ்வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தபோதிலும் இடைநடுவில்இ ஒப்பந்தக்காரர்  மதிப்பீட்டு அறிக்கையின் விலைகளில் மாற்றங்களை செய்யப்பட வேண்டும் எனக்கோரி இவ்வேலைகளை சில காலம் நிறுத்தியிருந்தார் .

இவ்வீதியின் பணிகள் நிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து பொதுமக்கள் எதிர் நோக்கும் அசௌகரியங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கடந்த வெள்ளிக்கிழமை (24) நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்  ஜீ.பிரேமசிறியினை அமைச்சில் சந்திந்து இவ்வீதியின் நிலவரம் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறினார் 

இதைத்தொடா;ந்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்  ஜீ.பிரேமசிறி மகநெகும நிறுவனத்தின் தலைவர்  கிங்ஸ்லி ரணவக்கவினை தொடர்பு கொண்டு குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகளை உடன் ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் .

இவ்விடயமாக மகநெகும நிறுவனத்தின் தலைவா; மற்றும் பொது முகாமையாளர்  ஆகியோர்  பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த சாஹிபு வீதியின் பணிகள் இருவாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்;துள்ளனர் 

இவ்வாறு கல்முனை சாஹிபு வீதி அபிவிருத்திப் பணியில் கண்ணும் கருத்துமாக பாராளுமன்ற உறுப்பினர்  இருக்கும் நிலையில், கல்முனை மாநகர முதல்வர்  இவ் அபிவிருத்திப் பணிக்குள் தனது பெயரை நுளைக்கும் முயற்சியினை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கல்முனை பிரதேசத்தில் காசிம் வீதி, தைக்கா வீதி, ஹனிபா வீதி, பழைய தபாலக வீதி என பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இப்பணிகளை கல்முனை மாநகர முதல்வர்  மேற்கொள்ளாமல், பாராளுமன்ற உறுப்பினரின் அபிவிருத்தி பணிகளுக்குள் தலையிடுவதையிட்டு பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்  எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top