பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகுமஅபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கடற்கரைசிறுவர் பூங்கா அமைப்பதற்காக கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சிராஸ்  மீராசாஹிபின் காலத்தில் 1 கோடியே 67 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் கடற்கரை சிறுவர் பூங்காஅமைப்பதற்காக முன்னாள் முதல்வரும் பொறியியலாளர்களும் சேர்ந்து சகலஅம்சங்களுக்குரிய சிறுவர் பொழுதுபோக்குவிளையாட்டு உபகரணங்களை உள்ளடக்கியதாகமுழுமையான கடற்கரை சிறுவர் பூங்காஅமைக்கப்படுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு ஓகஸ்ட்மாதமளவில் முன்னாள் முதல்வர் சிராஸ்மீராசாஹிபின் அழைப்பின் பேரில் கடற்கரை சிறுவர்பூங்கா அபிவிருத்தி வேலைகளை நான் ஆரம்பித்துவைத்தேன்.
ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகள்நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அன்றுஇவ்வேலைகளுக்கு தடங்கள்கள் ஏற்பட்டபோது நான்தலையிட்டு மாநகர சபையின் நிர்வாகத்துடன்இணைந்து கடற்கரை சிறுவர் பூங்கா அமைக்கும்வேலைகளுக்கு முழு உதவிகளையும் செய்துகொடுத்தேன்.
இந்த அடிப்படையில் இன்று திறக்கப்பட்ட சாய்ந்தமருதுகடற்கரை சிறுவர் பூங்கா தொடர்பாக சிலவிமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்அதில் முக்கியமாக ஏற்கனவேதயாரிக்கப்பட்ட வரை படத்தில் இருந்த சிறுவர்விளையாட்டுப் பகுதி முற்று முழுதாகசெய்யப்படவில்லை என்பதுடன் ஏனைய அம்சங்கள்நிறைவடையாமலும் அவசரமாக சிறுவர் பூங்காதிறக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த சாய்ந்தமருதுமக்களுக்கும்சிறுவர்களுக்கும் ஏமாற்றத்தைஏற்படுத்தியுள்ளதுஅவர்களுக்குரிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத விடயத்தை பிரதேச நலன்விரும்பிகள் தொடர்பு   கொண்டு  என்னிடம்முறையிட்டனர்.
எனவேபெரும் எதிர்பார்ப்பில் இருந்துபாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு  அதிரடிநடவடிக்கையாக சாய்ந்தமருது வொலிவேரியன்சுனாமி வீட்டுத்திட்ட பிரதேசத்தில் சிறுவர்விளையாட்டு தொகுதிகளை  உள்ளடக்கியமுழுமையான  சிறுவர் பூங்கா  ஒன்றினைஅமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கானஅனுமதியினையும் பெற்றுள்ளேன்.
அதற்கான சகல அபிவிருத்தி வேலைகளையும்இன்னும் இரண்டு மாதத்திற்குள் செய்து முடித்துசிறுவர்களின் எதிர்பார்ப்புக்களையும்கனவுகளையும்நிறைவேற்றிக் கொடுப்பதற்கு எண்ணியுள்ளேன்.
இந்த விடயம் சம்பந்தமாக ஏற்பட்ட குறைபாடுகள்தொடர்பில் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுவின்தலைவர் என்ற வகையில் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்தபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகுமதிடட்டத்திற்குப் பொறுப்பான பணிப்பாளரிடம்முறைப்பாடு செய்வதற்கும் தீர்மானித்துள்ளேன்என்றார் 



கருத்துரையிடுக

 
Top