தம்புள்ளயில் மட்டுமல்ல பல்வேறு இடங்களிலும் பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டாலும், அகற்றப்பட்டாலும் அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூட எதிர்புக்குரல் எழுப்ப முடியாதவாறு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளனர். பூட்டின் திறப்பு அரசிடமுள்ளது. 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா  கல்முனையில் நடை பெற்ற நிகழ்வொன்றில் கூறினார் 

கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரனின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் 40 வறிய குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கென தையல் இயந்திரங்களை வழங்கும் வைபவம் கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கருத்துரையிடுக

 
Top