(யு.எம்.இஸ்ஹாக்)
பின் கதவால் சென்று பதவி  பெற்று  சமுகத்துக்கு துரோகம் செய்ய  நாம் ஒரு போதும் விரும்பவில்லை  என ஹரீஸ் எம் .பீ இம்போர்ட் மிரர் இணையத்துக்கு  தெரிவித்தார் .பிரதி அமைச்சர் பதவியை பெற வேண்டுமென்றால் அது ஒரு பெரிய விடயமாக இருக்க வில்லை . பிரதி அமைச்சர்  பதவியை  பெற்று எமது கட்சியை காட்டிக் கொடுக்கும்  வேலையே நான் ஒரு போதும் செய்யப் போவதில்லை .

தீகாம்பரம்,ராதா கிருஷ்ணன் ,பிரபா கணேசன் ஆகியோருக்கு  பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்ட போது  கூட  பிரதி அமைச்சர்  பதவியை பெறுமாறு  எமக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.  அரசு முஸ்லிம்கள் விடயத்தில் நடந்து கொள்ளும் விடயம் பாமர மகனுக்கும் புரியும்  ,  அழுத் கம  சம்பவத்துக்குப் பிறகு நாங்கள் மனம்  பாதிக்கப் பட்டிருக்கும்  நிலையில்  நாம் கள்ளத்தனமாக  பதவிகளைப் பெற்று   எமது மக்களுக்கு  துரோகம்  செய்ய  ஒரு போதும் விரும்ப வில்லை  .  என் மீது காழ்புணர்ச்சி கொண்டவர்கள்  எனக்கெதிராக இனணய தளங்களை பயன்படுத்தி பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறான  அறிக்கை விடுபவர்கள்  தைரியமிருந்தால் என்     முன்னால்  வந்து பேசட்டும் என சவால் விடுத்தார்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்கான காலம் கனிந்துள்ள

 நிலையில் அதனை குழப்பி கட்சியை விளவுபடுத்துவதற்கான சதி முயற்சியே

 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவி பெறப்போகின்றார்கள்

 என்கின்ற செய்திகளாகும்.எப்படியான செய்திகளை பரப்பினாலும், எமது கட்சியின் பாராளுமன்ற

 உறுப்பினர்கள் ஒற்றுமையாகவும், சமூகப் போராட்டத்தை 

முன்னடுப்பவர்களாகவும் இருக்கின்றனர். கட்சிக்கு வெளியே உள்ளவர்களும்,

 கட்சி என்று பதவி மோகம் பிடித்தவர்களும் பிழையான செய்திகளை பரப்ப

 முனைகின்றனர்.


தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தெரியாமல் பதவி எதையும் பெற மாட்டேன் என்பது  அவருக்கு நன்றாக தெரியும்  நான் எமது கட்சிக்கு  என்றும் விசுவாசமாக செயல் படுபவன்   எனவும் தெரிவித்தார் . நான்  பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம். ,தௌபீக்  ஆகிய மூவருடனும்  அமைச்சர் பசில் ராஜ பக்ஸ பிரதி அமைச்சரை  பெறுவது தொடர்பாக பேசிய போது  தலைவர் அந்த நேரம் நாட்டில் இருக்கவில்லை . இருந்த போதும் தலைவருக்கு தெரியாமல் பதவி பெறுவதை  நாம் மூவரும்  பெற்றுக்கொள்ளப் போவதில்லை  என்று அந்த கோரிக்கையை நிராகரித்தோம் .

அம்பாறை கரையோர மாவட்டத்தை பெறுவதற்கு தடையாக இருந்தவர் அமைச்சர் தயாரத்னாதான் என பாராளுமன்ற  உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார் . கல்முனையை துண்டாடும் சதி வேலையை இன்றும் அவர் செய்து கொண்டிருக்கின்றார் . கடந்த இரண்டு வருடமாக இந்த  அரசாங்கம் வழங்காத    அம்பாறை கரையோர மாவட்டத்தை   எதிர் வருகின்ற குறுகிய காலத்துக்குள்  கரையோர மாவட்டம் வழங்கப் படுவது என்பது கேள்விக்குறியான விடயமாகும் .

இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரங்கள் இன்றி ஒரு சேவகனாக மட்டுமே  செயல் படுகின்றனர் . இந்த காலகட்டத்தை பொறுத்த மட்டில் கரையோர மாவட்டத்தை பெறுவதே முஸ்லிம்களுக்கான  ஒரே தீர்வாகும் என ஹரீஸ் எம்.பீ  தெரிவித்தார் . 

கருத்துரையிடுக

 
Top