“வாழ்வின் எழுச்சி திவிநெகும தேசிய நிகழ்ச்சித் திட்டம் 6ம் கட்டம் 2014நிறைவான இல்லம் வழமான தாயகம் நிகழ்ச்சித்திட்டம் இன்று (20) தேசிய ரீதியில் காலை இடம் பெற்றது.

கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் கல்முனைக்குடி 10,11,12,13,14 ஆகிய கிராமசேவகர் பிரிவுக்கான நிகழ்வு குறித்த பிரதேசங்களில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பயனாளிகளும் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top