தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு  கல்முனை  இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய புத்தக கண்காட்சி  அதிபர்  எம்.சி.எம்.அபூபக்கர்  தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப் பட்டது . 
புத்தக கண்காட்சிக்கென  கல்லூரி ஆசிரியர்களால் சேகரிக்கப் பட்ட ஒரு தொகுதி புத்தகங்கள்  ஆசிரியர்களால் அதிபரிடம் கையளிக்கப் பட்டதோடு  கல்லூரி மாணவர்கள்  அனைவரும்  இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர் .

சுனாமியால் பாதிக்கப் பட்ட  இப்பாடசாலை மாணவர்களுக்கு   அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் கட்டிக் கொடுக்கப் பட்ட இப்பாடசாலை கட்டிடத்தில்  நூலக வசதி உள்ளதால் இந்த நூலகத்தை  இங்குள்ள வறிய மாணவர்கள் பயன்படுத்தும் வகையில்  செயற்படுத்த உள்ளதாக அதிபர் அங்கு குறிப்பிட்டார் 

கருத்துரையிடுக

 
Top