(எம்.ரீ.எம்.பாரீஸ் )
ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ நேற்று கிழக்கு மாகாணத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக திருகோணமலை மாவட்டத்திற்கு தனது உத்தியோபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருத்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஜனாதிபதி மாவட்டத்தின் பாடசாலைகளில் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு  கூடம் பலவற்றை திறந்து வைத்தார்.
கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோய தொழில்நுட்ப ஆய்வு  கூடத்தை திறந்து தேசத்தின் சிறார்களிடம் கையளிக்கும் வைபவத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தனது உரையின் போது குறிப்பிட்டார்.

இதற்காக அரசாங்கம் புதிய முறையொன்றினை அறிமுகப்படுத்தியயுள்ளது. இந்த முறையின் கீழ் வசதியற்றவர்களும்  ஹஜ் யாத்திரிகையினை மேற்கொள்ள முடியும் என அவர்  குறிப்பிட்டார்.  இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ் கடமையினை நிறைவேற்றிய முஸ்லிம்களாகவே மரணிக்க வேன்டும் என தமது உரையின் போது மேலும்  குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top