கல்முனை பொலிஸ்  நிலையம் முன்பாக இன்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை  கல்முனை உதவி பொலிஸ்  அத்தியட்சகரின் தலையீட்டால்  தணிக்கப் பட்டது . 
கல்முனை முருகன் கோவில் அருகில்  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் யுவதி ஒருவரும் தகாத முறையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில்  பொது மக்களால் நயப்புடைக்கப் பட்டு  பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர் .

இதனை விசாரிக்க சென்ற பொலிசாரை இளைஞ்சர்கள் தாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில் இரு தமிழ் இளைஞ்சர்களும்  கல்முனை முருகன் கோயில் பூசகரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டதை  எதிர்த்து கல்முனை தமிழ் இளைஞ்சர்கள் பொலிஸ்  நிலையம் முன்பாக திரண்டு கைது செய்தவர்களை விடுவிக்குமாறு கோரி திரண்டனர் .

இதனை அடுத்து சம்பந்தப் பட்டவர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோனின் கட்டளைக்கு அமைய விசாரிக்கப் பட்டதன் பின்னர் கைது செய்யப் பட்டவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர் . அவர்கள் விடுவிக்கப் பட்டதை அடுத்து  பொலிஸ்  நிலையம் முன்பாக திரண்ட இளைஞ்சர்கள் கலைந்து சென்றனர் .

இதே வேளை  தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும்  போலிஸ் உத்தியோகத்தரும் ,யுவதியும்  தொடர்ந்து விசாரிக்கப் பட்டதன் பின்னர்  யுவதி விடுவிக்கப் பட்டார் . பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொடர்ந்து விசாரணை செய்வதாகவும் அவருக்கு உடனடி இடமாற்றம் வழங்குவதாகவும் உதவி பொ லிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் தெரிவித்தார் . 

கருத்துரையிடுக

 
Top