சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் வருடாந்த பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.

இதன்போது வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கடந்த கால அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கத்தினை செயலாளர் றியாத் ஏ. மஜீத் சபைக்கு எடுத்துக்கூறியதுடன் சென்ற வருட கூட்டறிக்கையினையும் சபைக்கு சமர்ப்பித்தார்;.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பதில் பொருளாளர் ஐ.எல்.ஏ.றாசிக் கணக்கறிக்கையினையும் சமர்ப்பித்தார்.

இதனை அடுத்து சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபைக்கான 2015ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

இதில் தலைவராக சுகாதார திணைக்களத்தின் சுற்று நிருபப்படி டாக்டர் என்.ஆரிப் நியமிக்கப்பட்டார், செயலாளராக மீண்டும் றியாத் ஏ. மஜீத், பொருளாளராக ஐ.எல்.ஏ.றாசிக், உப தலைவர்களாக எம்.ஆதம், எம்.ஐ.உதுமாலெப்பை, உப செயலாளராக யூ.கே.காலிதீன், கணக்காய்வாளராக ஏ.எம்.அஹூவர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக சபை உறுப்பினர்களாக ஏ.எல்.ஆப்தீன், யூ.எல்.றபீக், ஏ.எம்.ஜஃபர், ஏ.ஏ.ஜெமீல், சீ.எம்.முனாஸ், ஏ.ஜீ.ஏ. நிசார், மௌலவி ஏ.எம்.ஏ. ஜப்பார், அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.றஃசூக், எம்.இஸட்.எம்.ஹூசைன், எம்.எஸ்.ஏ.எச்.றமீஸ், யூ. ஆதம்கண்டு, எம்.எம்.எம்.சரீப், எம்.ஐ.சம்சுதீன், நௌபர் ஏ. பாவா, எம்.எஸ்.எம்.ஸபான், ஏ.எம்.றியாஸ்,எம்.எஸ்.அஹமட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கருத்துரையிடுக

 
Top