மட்டக்களப்பு மண்டூர் மக்கள் வங்கி கிளையில் உரிய வேளைக்கு ஆசிரியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவு வழங்கப் படுவதில்லையென  அப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் வங்கி கிளையில் ஒவொரு மாதமும் சம்பளக்கொடுப்பனவு  தாமதாமாக வழங்கப் படுவதாகவும்  அங்கு செல்கின்ற ஆசிரியர்களுக்கு முகாமையாளர் ஒவொரு காரணத்தைக் கூறுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர் .

நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் தமிழ் ஆசிரியர்களுக்கு  மாவட்டத்தின் சகல வங்கி கிளைகளிலும் சம்பளம் வழங்கப் பட்டுள்ள நிலையில்  மண்டூர் மக்கள் வங்கி கிளையில் மாத்திரம் சம்பளக் கொடுப்பனவு வழங்காதிருப்பது  கவலை அளிப்பதாகவும்  இதனால் மண்டூர் பிரதேசத்தில் உள்ள மக்கள் வங்கி வாடிக்கயாளர்களான 150 க்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் முகாமையாளரின் பொறுப்பற்ற  செயற் பாட்டினால் பாதிப்படைந்துள்ளதாகவும் ஆசிரியர்கள் கவலை  தெரிவிக்கின்றனர். 

கருத்துரையிடுக

 
Top