வறுமை ஒழிப்பு வாரத்தை  முன்னிட்டு  கிழக்கு மாகாண  சபை  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  அம்பாறை மாவட்ட உறுப்பினர் பேராசிரியர்  எம்.ராஜேஸ்வரனின்  நிதி  ஒதுக்கீட்டில்  சுய தொழில்  முயற்சியாளர்களுக்கான  நிதி கையளிக்கும் நிகழ்வு இன்று  உறுப்பினரின் மணல்சேனை அலுவலகத்தில் இடம் பெற்றது .

மாகாண  சபை  உறுப்பினரின் செயலாளர் வீ.அழகு ரத்தினம் தலைமையில் இடம் பெற்ற  வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண  சபை மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எஸ்.நடராஜா  கலந்து கொண்டார் . நிகழ்வில்  நற்பிட்டிமுனை அம்பலத்தடி  ஆலய   நிருவாக பரிபாலகர் கனகரட்னம் ,ஓய்வு பெற்ற விவசாயப் போதனாசிரியர் எஸ்.சுப்பிரமணியம்  ஆகியோரும் மற்றும்  கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .

பதுளை மாவட்டத்தில் மண் சரிவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப் பட்டதுடன் அவர்களுக்கான  உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அங்கு தெரிவித்தார் .

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்  அரசின் செல்லப் பிள்ளையாக இருக்கின்ற வர்கள்  எம்மால் செய்யப் படுகின்ற திட்டங்களுக்கு தடையாக இருக்கின்றனர் . எமக்கு அபிவிருத்தி முக்கியமானதல்ல . தன்மானத்துடன் தமிழர்கள்  வாழ்வதையே நாம் விரும்புகின்றோம் . நாம் கிழக்கு மாகான சபையில் எதிர் கட்சியில் இருப்பதால்   ஆளும் தரப்பினர் எமக்கான பங்கீடை முறையாக தர மறுக்கின்றனர் . இருப்பினும் ஒரு சிலர் எமக்கு உதவுகின்றனர் என்றார்.
கருத்துரையிடுக

 
Top