பி. முஹாஜிரீன்
அம்பாறை மாவட்டத்தில் நிலவிய வரட்சியினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டபட்ட இசங்கேணிச்சீமைக் கிராமத்தில் வாழும் மக்களுக்கு குடிநீர் பெறுவதற்கான கொள்கலன்கள் வழங்கும் நிகழ்வு நேற்று   (17) வெள்ளிக்கிழமை இசங்கேணிச்சீமை பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது.

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.எம். றுஸ்லிம் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. றாசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கான குடிநீர்க் கொள்கலன்களை வழங்கி வைத்தார்.

திவிநெகும திணைக்கத்தின் அக்கரைப்பற்று பிரதேச தலைமை முகாமையாளர் எம்.ஏ. இமாமுதீன் , கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.ஜி.எம். தாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு குடிநீர்க் கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.கருத்துரையிடுக

 
Top