(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக்கட்சியினை கல்முனைப் பிரதேசத்தில் மீள கட்டியெழுப்புதல் மற்றும் கட்சியின் கட்டமைப்பை உருவாக்குதல் சம்பந்தமாக பிரதேச மக்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று இரவு ( 22 ) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஸிம் , திருமதி தயா கமகே , மேல் மாகாண சபை மேயர் முஸம்மில் , மேல்மாகாணசபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் , மத்திய மகாணசபை உறுப்பினர் முஹம்மட் லாபிர் , அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச ஐ.தே.கட்சி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.அப்துல் மஜீட் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுல பெர்னான்டோ , சட்டத்தரணி சறூக் காரியப்பர் , கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தயா கமகே , கல்முனை மாநகரசபை உறுப்பினர் நபார் உட்பட ஐ.தே.கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது பெரும் தொகையில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top