(பி. முஹாஜிரீன்)

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின்  புதிய தேசிய தலைவராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வூபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.உதுமாலெவ்வை தெரிவு  செய்யப்பட்டுள்ளார் 

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும் கொழும்பு ஹார்டி கேட்போர்  கூடத்தில் முன்னணிகளின் முன்னாள் தேசிய தலைவர்  சட்டத்தரணி றசீட் எம்.இம்தியாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றபோது இடம்பெற்ற புதிய நிருவாகத் தெரிவிலேயே எம்.ஐ.எம்.உதுமாலெவ்வை புதிய தேசிய தலைவராகத் தெரிவு  செய்யப்பட்டுள்ளார் .

இந்நிகழ்வில் பிரதம மந்திரி டீ.எம்.ஜெயரட்ன  பிரதம அதிதியாகவும், ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோர்  கௌரவ அதிதிகளாகவும், சிரேஸ்ட அமைச்சர்  ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர் , ஹூனைஸ் பாறூக் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கிர்  மாக்கார் , ஏ.எம்.இமாம், யூ.எல்.எம்.பாறூக் ஆகியோர் அதிதிகளாகவும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் உட்பட ஊடகவியலாளர்கள் முன்னணிகளின் முன்னாள் தலைவர்கள் போன்றோர்ர் கலந்து கொண்டனர் 

இதன் போது முன்னணிகளின் முன்னாள் தலைவர்  றசீட் எம்.இம்தியாஸ், செயலாளர்  லுக்மான் சஹாப்தீன், பொருளாளர்  சாம் நவாஸ் ஆகியோரினால் பிரதம மற்றும் கொரவ அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததுடன் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள முன்னணிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உட்பட, இவ்வாண்டு நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றி முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட மாவனல்ல சாகிறா கல்லூரி மாணவி எம்.என்.பாத்திமா சமா ஆகியோரும் நினைவூச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

மேலும் பல்கலைக்கழக வசதி குறைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்குதல், முன்னணியின் “உதய கீற்று” நினைவூ மலர்  வெளியீடு போன்ற பல் வேறு நிகழ்வு கள் இடம்பெற்றது.கருத்துரையிடுக

 
Top