எஸ்.எம்.எம்.ரம்ஸான் 
ஒக்டோபர் 15 உலக கை கழுவல் தினமாகும். உலக கை கழுவல் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் விழிப்புணர்வு  ஊர்வலமும் கை கழுவல் பயிற்சி வழங்கும் நிகழ்வும்  இன்று புதன் கிழமை   கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. கல்லூரியின் சுற்றாடல் சுகாதார கழகத்தின் ஏற்பாட்டில் அதிபர் யூ.எல்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் அதிதியாக கலந்து கொண்டதுடன் சிரேஸ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.ஜெரீன் மாணவர்களுக்கு கை கழுவல் பயிற்சி வழங்கினார்.
 
நிகழ்வில் பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

 
Top