அரசினால் அறிமுகப்படுத்திய மகிந்த சிந்தனை வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக சனச அபிவிருத்தி வங்கியினால் அறிமுகப்படுத்தும் சிரேஸ்ட பிரஜைகளுக்கான விசேட ஓய்வூதிய கடன்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு சனச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளையில் இன்று (16) கிளை முகாமையாளர் வானதி ஜெகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிரேஸ்ட பிரஜைகளும் மட்டக்களப்பு கிளை உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர்கs; பலரும் கலந்து கொண்டதுடன் முதலாவது உபகார கடனை டச்பார் இக்நேசியஸ் வித்தியாலயத்தின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் சோமசுந்தரம் சிவலிங்கம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top