(ஐ.எல்.எம்.றிஸான்)
ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசில் கொடுப்பனவு  வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து தற்போது க.பொ.த உயா;தரப் பிரிவில் கல்வி பயிலும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை மாணவர்கள் இதன் போது தமக்கான கொடுப்பனவு  காசோலைகளைப் பெற்றுக் கொண்டனர்  பிரதிக் கல்விப் பணிப்பாளர்  ஏ. எஸ். அஹமட் கியாஸ்இ கணக்காளர்  கே. றிஸ்வி யஹ்ஸா, நிதி உதவியாளர்  ஏ.சுந்தரகுமார்  ஆகியோர்  மாணவர்களுக்கு காசோலை கையளிப்பதையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ். றினோசுல் ஹூஸைனஸ், ஏ. எஸ். றுக்ஸான் ஆகியோருடன் பயனாளி மாணவர் களையும்  காணலாம்.


கருத்துரையிடுக

 
Top