மாம்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் மரணமான சம்பவம் இன்று காலை கல்முனையில் இடம் பெற்றுள்ளது.
கல்முனை-03 குறிச்சி மாதவன் வீதியை சேர்ந்த  46 வயதான நல்ல தம்பி ஜேசுதாஸன் என்பவரே சம்பவத்தில் இறந்துள்ளார்.
இன்று காலை 8.45 மணிக்கு தனது இல்லத்தின் முற்றத்திலிருந்த மாமரத்தில் மாம்பழம் பறிக்க ஏறிய போது அருகில் இருந்த 33000 வாட்ஸ் சக்தி கொண்ட மின்னிணைப்பு கம்பியில் மாங்காய் பறித்த இரும்புக் கம்பி பட்டு இவரை தாக்கியூள்ளது. மின்சாரம் தாக்கிய இவர் மரத்திலிருந்தவாறே கருகுண்டு கீழே வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணை மேற் கொண்டதுடன் இடத்துக்குச் சென்ற பதில் நீதிபதி ஏ.எம்.பதுறுத்தீன் சடலத்தை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

 
Top