(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் பெயர் சூட்டும் வைபவம் நேற்று  வியாழக்கிழமை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில்  ஏ.ஆர்.மன்சூரின் புதல்வரான நீதி அமைச்சின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் நாடாவை வெட்டி நூலகத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஹக்கீம் நூலக பதிவேட்டில் குறிப்பு எழுதியதுடன் நூலகத்தை பார்வையிட்டு அங்கு நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து நூலகரிடம் கேட்டறிந்து கொண்டார்.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண உறுப்பினர்கள்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோத்தர்கள் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் சேவைகளைக் கௌரவித்து அவரால் உருவாக்கப்பட்ட கல்முனை பொது நூலகத்தை புனரமைப்பு செய்து அந்நூலகத்திற்கு அவரது பெயரை சூட்டுவதற்கான முன்மொழிவை சில மாதங்களுக்கு முன்னர் மாநகர சபை அமர்வின்போது மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

 
Top