(சுரேஸ்)

மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏஅமைப்பின் ஏற்பாட்டில் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் பங்களிப்புடன் செயற்திட்டம் நடை முறைப்படுத்தும் கிராமங்களில் உள்ளகு டும்பங்களில் நல்ல புரிந்துணர்வுடன் ஏற்படக்கூடிய ஆரோக்கியமான நோக்குடன் வாழும் “மகிழ்ச்சியானகுடும்பம்”எனும் தொனிப் பொருளிலாக பயிற்சிநிகழ்வு  இன்று வை.எம்.சீ.ஏஅமைப்பின் ஒன்றுகூடல் மண்டபத்தில்நடைபெற்றது.
இப்பயிற்சியின்சேவ் த சில்ரன் நிறுவனத்தின் மாவட்டகிளை உத்தியேகத்தர்  மார்க், பால் நிலை தொடர்பான ஆலோசகர்  பொ. புவனேஸ்வரி மற்றும் வை.எம்.சீ.ஏஅமைப்பின் வெளிக்களஉத்தியோகத்தர்கள் சமூக வலுவூட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனா;.
அத்துடன் இப்பயிற்சி நெறியின் இலகுபடுத்துனராக கெயார்  இன்டர் நெசனல் அமைப்பின் ரவீச்சந்திரன் சௌமினி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top