கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (23) மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது .இந்து சேவா சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சுதர்சனனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இந்து ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாவும், செயலாளராக சிவம் பாக்கியநாதனும், பொருளாளர் எஸ்.கமலேஸ்வரனும், உபதலைவர் எஸ்.சுதர்சனனும், உப செயலாளர் செ.துஷியந்தனும், ஆலோசகர்மட்டக்களப்பு மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் பிரச்சாரச் செயலாளர் கே.தியாகராஜாவும், தெரிவு செய்யப்பட்டனர், மேலும் செயற்குழு உறுப்பினர்களும் 13 பேர் தெரிவு செய்யப்பட்டனர்
கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அடுத்த ஒன்று கூடல் எதிர் வரும் 02.11.2014 அன்று மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும், இதில் அம்பாறை, மட்டக்களப்பு, மற்றும், திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து இந்து ஊடகவியலாளர்களும், கலந்து கொள்ளுமாறும், அக்கூட்டத்தில் முக்கிய சில தீர்மானங்கள் மேற்கொள்ளவுள்தாகவும், இதன்போது கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உபதலைவர் எஸ்.சுதர்சனன், கூறினார்.

     

கருத்துரையிடுக

 
Top