நாடு பூராவும் நாளை (20) சுபநேரமான 10.07 மணிக்கு ஆரம்பமாகவுள்ள திவிநெகும தேசிய  திட்டத்தின் கல்முனை பிராந்திய  வேலை திட்டம் கல்முனை  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரீன் பீல்ட் றோயல் வித்தியாலயத்தில்  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.சர்ஜூன்  தலைமையில்   நடைபெறவுள்ளது.
இம் மாதம் 20ஆம் திகதி நாளை  நாடு பூராகவுமுள்ள 14,022 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் ஆறாம் கட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன் போது, குடும்ப பொருளாதார மற்றும் போஷாக்கை மேம்படுத்துவதற்கான 25 இலட்சம்  மனைப்பொருளாதார அலகுகளை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அன்றையதினம் மரக்கண்டுகள், பழமரக்கண்டுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் செயற்படுத்தப்பட்டுவரும் நிறைவான இல்லம் வளமான தாயகம் என்ற தொனிப்பொருளில் திவிநெகும திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  பிரதம அதிதிதியாக வும்  மற்றும் பிரதேச செயலாளர் , அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். 

கருத்துரையிடுக

 
Top