(சுரேஸ்)


நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் செயற்திட்டத்தின் கீழ் “ஒரு வளமான குடும்பத்திற்கு ஆண், பெண் இருவரினதும் சமமான பங்களிப்பு அவசியம்” எனும் தொனிப்பொருளின் கீழ் சேவ் த சில்ரன் மற்றும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பிரயோக அரங்கு நாடக நிகழ்வு மணிபுரம் பிரதேச கிராம சேவகர் அலுவலக முன்றலில் சேவ் த சில்ரன் அமைப்பின் பால் நிலை தொடர்பான ஆலோசகர்  பொ. புவனேஸ்வரி  தலைமையில் நடைபெற்றது.
இப்பிரயோக அரங்கில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ அமைப்பின் பால் நிலை தொடர்பான வெளிக்கள உத்தியோகத்தர்  லாவணியா மற்றும் பிரதேச சமூக ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டதுடன் ஹட்டன் பிரதேச “நாம்” எனும் பிரபல நாடகக்குழுவினர்களின் சமூகத்தின் மத்தியில் உள்ள சிறுவர்  துஸ்பிரயோகம், குடிப்பழக்கம், பெண்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நாடகம் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top