சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மத்திய முகாம் சாளம்பைக்கேணி அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினா் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள பாடசாலை சுற்று மதிலுக்கான அடிக்கல் நடல், ஆசிரியர் தின கௌரவிப்பு விழா, சாதனையாளர்கள் கௌரவிப்பு போன்ற முப்பெரும் விழா இன்று (27) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

அதிபர் எஸ்.எம்.எம்.யூசூப் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்த கொண்டார். 

கௌரவ அதிதிகளாக மைஹோப் மற்றும் ஐவா தாதியர் கல்லூரி என்பவற்றின் அதிபர் லயன் சித்தீக் நதீர் எம்.ஜே.எப், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் செயலாளர் சீ.எம்.முனாஸ், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கணக்காளர் வை.ஹபிபுல்லா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர்பீட உறுப்பினர் ஏ.சீ.ஏ.நிசார், பாராளுமன்ற உறுப்பினரின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் ஏ.எம்.மஹ்றூப் உட்பட பல பிரமுகர்கள் கலந்த கொண்டனர். 

இந்த நிகழ்வின் போது சர்வதேச ஆசிரியர் தினத்தையிட்டு அதிபர் ஆசிரியர்கள் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் இப்பாடசாலையில் கல்வி கற்று இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர்களான ஏ.எம்.நௌஷாட்,ஹைதர் அலி ஆகியோர் பாராட்டப்பட்டனர். 

மேலும் உலக குடியிருப்பு தினத்தையிட்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடாத்தப்பட்ட தேசிய கட்டுரைப் போட்டியில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று ஜனாதிபதி விருது பெற்ற மாணவி யூசூப் பாத்திமா நஸீஹா மற்றும் பாடசாலையிலிருந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள், புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்படட்னர். 

இந்த முப்பெரும் விழாவுக்கான முழு அனுசரணையினை மைஹோப் மற்றும் ஐவா தாதியர் கல்லூரி என்பவற்றின் அதிபர் லயன் சித்தீக் நதீர் வழங்கியிருந்தார்.கருத்துரையிடுக

 
Top