(சுரேஸ்)
போர்த்துகல் பறங்கியர்  அமைப்பின் கிழக்குமாகாணத்தின் பிரதான அலுவலகமான மட்டக்களப்பு போர்த்துகல்  பறங்கியர்  அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்த பறங்கியர்  தின சிறப்பு நிகழ்வு அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் அருட் தந்தை கலாநிதி. பிரான்சிஸ் எக்வியர்  டயஸ் தலைமையில் பர்ணாட்டோ மண்டபத்தில் இன்று26 நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக போர்த்துகல் பறங்கியார்  அமைப்பின் தலைவர்  கலாநிதி.பார்ணாட்டோர்லாவீடா; நொப்ரே அமைப்பின் நிர்வாக உத்தியோகத்தர்  என்.ஐ.எச்  லொயிஸ் நொப்ரீ ஏகேட் அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை ஜெரோம் டிலிமா ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக அம்பாரை கல்முனை வாழைச்சேனை ஏறாவூர்  பிரதேசங்களில் உள்ள தேவாலய அருட் தந்தையர்களும் அப்பிரதேச பங்கு மக்களுமாக நூற்றுக் கணக்கானோர்  கலந்துகொண்டனர் 
ஆரம்ப நிகழ்வில் அமைப்பின் செயற்பாட்டிற்காக போர்த்துகல் நாட்டின் பறங்கியர்  அமைப்பின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாம் மேல் மாடி அறை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதன் பின்னர்  மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
அதில் மாவட்ட மட்டத்தில் பறங்கியர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாட்டு,நடனம்,நாடகம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டமாணவமாணவிகளது நிகழ்சிகள் அரங்கேறியதுடன் அதில் வெற்றிபெற்றவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் பரில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக

 
Top