(எஸ்.எம்.எம்.ரம்ஸான் )
பாவாணர் அக்கரை பாக்கியன் தெய்வங்கள் மீது பொழிந்த  பாமலர்கள் இறு வெட்டு வெளியீட்டு விழா  இன்று(19) மாலை  கல்முனை நால்வர் கோட்டத்தில்   மாணவ மீட்பு பேரவையின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஷ் தலைமையில் நடை பெற்றது .

நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை தமிழ்  சங்க தலைவரும்  காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளருமான கலாநிதி  பரதன் கந்தசாமி  கலந்து  கொண்டு  இறுவெட்டை வெளியிட்டு வைத்தார் .

கிழக்கு மாகான சபை  உறுப்பினர்களான  பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் , த .கலையரசன்  ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்  இறு  வெட்டின் முதல் பிரதி பெறும்  கௌரவ அதிதியாக  ஆலையடி வேம்பு  பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸ் வரன் கலந்து  முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் .

விசேட அதிதிகளாக  கல்முனை மாநகர சபை  தமிழ் தேசிய கூட்டமைப்பு  உறுப்பினர்களான வீ.கமலதாசன் ,சி.ஜெயகுமார்  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் .
புதுமை வாணன்  க.ட்னிஸ்கரன்  வரவேற்புரை வழங்க  சிவஸ்ரீ  பொன் சுதந்திரன் குருக்களால்  ஆசியுரை வழங்கப் பட்டது.  வெளியீட்டு உரையை  கலாநிதி இசைகலை  மாமணி  கண .வரதராஜன் நிகழ்த்த  வாழ்த்துக் கவிதை யை  சிரேஷ்ட ஊடகவியலாளர்  செல்லையா பேரின்பராசாவும் ,கருத்துரையை  ஓய்வு நிலை  அதிபர்  யோகாரத்தினம்  கா.சந்திர லிங்கம்  வழங்கினார் .
ஏற்புரையை பாவானர்  அக்கரை  பாக்கியன்  வழங்க கலாநிதி பரதன் கந்தசாமியினால்  பிரதம அதிதி உரை நிகழ்த்தப்பட்டு  யசோதரன்  நன்றியுரை வழங்கினார் .

நிகழ்வில் பாவானர்  அக்கரை  பாக்கியன்  கிழக்கு மாகாண  சபை உறுப்பினர்  பேராசிரியர்  பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் கருத்துரையிடுக

 
Top