(சுரேஸ்)

யுத்தத்தினால் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் மனதாலும் அங்கங்களாலும் வலது குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார மேன்பாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கன்டிகப் இன்டர்நெசனல் அமைப்பின் நிதியுதவியில் கமீட் அமைப்பின் செயற்திட்டத்தின் கீழ் வவுணதீவு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகிழவெட்டுவான், ஐயங்கேணி, சித்தாண்டி-04 பாலையடித்தோணா  ஆகிய கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கான இலகு மற்றும் மாற்றி அமைப்புக்களுடன் கூடிய உபகரணங்கள் கமீட் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் எம்.ஜெயகுமார் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திட்டத்திற்கான கன்டிகப் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ச.கிறிஸ்டி மற்றும் திட்ட உத்தியோகத்தர் எஸ்.கலைவேந்தன் அத்துடன் பிரிவுகளின் கிராம சேவகர்கள் பொருளாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஒவ்வொரு பயணாளிகளுக்கும் சுமார் 38000 ரூபா பெறுமதி மிக்க தையல் இயந்திரங்களும் நிறை அளக்கும் கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
கருத்துரையிடுக

 
Top