வெளி நாடு செல்லவிருப்பவர்களுக்கும் வெளிநாட்டில்  தொழில் புரிகின்றவர்களின் குடும்பத்தினருக்கும்  காரைதீவு  இலங்கை வங்கிகிளை ஏற்பாடு செய்துள்ள நேர்த்தியான கொடுக்கல் வாங்கல் தொடர்பான செயலமர்வு  நடைபெறவு ள்ளது.
கடந்த 75 வருடங்களாக வங்கிச் சேவையாற்றிய இலங்கை வங்கியினால் நடாத்தப்படும்  இச் செயலமர்வானது நாளை சனிக்கிழமை (18) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்புமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்ட முகாமையாளர்  ஜே.ஜி. பிரியந்தகுமார தலைமையில் நடைபெறவுள்ள இச் செயலமர்வில்  இலங்கை வங்கி தலைமைக் காரியாலயத்தின்  சர்வதேசத்துக்கான உதவிமுகாமையாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் மற்றும்  இலங்கை வங்கியின் கிழக்குமாகாண உதவி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன்  ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர் என  காரைதீவு  இலங்கை வங்கி கிளை முகாமையாளர் ஆர்.தவராஜா தெரிவித்தார்.
இந்த செயலமர்வு  தொடர்பாக  காரைதீவு இலங்கை வங்கி கிளை முகாமையாளர் ஆர்.தவராஜா தெரிவிக்கையில் வெளிநாடுகளில் கஸ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தினை மிகவும் பாதுகாப்பாகவூம் விரைவாகவும்  குறைந்த தரகுக் கட்டணத்துடன் வெளிநாட்டிலிருந்து  இலங்கைக்கு பணம் அனுப்புகின்ற போது ஏற்படுகின்ற வாடிக்கையாளர்கள் அறியாத சட்டப் பிரச்சினைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது தொடர்பாக  இலங்கை வங்கியின்  தலைமை அலுவலக வெளிநாட்டுப் பிரிவின்  உயர் அதிகாரிகளினால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இந்த செயலமர்வூடாக மத்தியகிழக்கு நாடுகளில் இருக்கின்ற  இலங்கை வங்கியின் பிரதிநிதிகளும்  நேரடியாக தொலைபேசி மூலம் விளக்கமளிக்கவுள்ளனர்  எனதெரிவித்தார்

கருத்துரையிடுக

 
Top