சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை அல்-பஹ்றியா ம.வி.ஆசிரியர் அணிக்கும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிஆசிரியர்அணிக்குமிடையே இன்று(15) நடைபெற்ற பத்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கெட்போட்டியி ல்கல்முனை அல்பஹ்றியா ம.வி. ஆசிரியர் அணி ஐந்து விக்கட்டுக்களால்வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிஆசிரியர்அணியினர் பத்துஓவர்கள் முடிவில்132 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு ஆடிய கல்முனை அல்-பஹ்றியா ம.வி. ஆசிரியர்அணி
 8.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்கள் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் பெற்று ஐந்து விக்கட்டுக்களால் வெற்றிபெற்றனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக , ஆடடமிளக்காமல்  49 ஓட்டங்களைப் பெற்ற கல்முனை அல்-பஹ்றியா ம.வி. ஆசிரியர் அணியைச் சேர்ந்த சுதர்சன்ஆசிரியர் தெரிவானார். 

கருத்துரையிடுக

 
Top