சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினருக்கும் கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூருக்குமிடையில் வைத்தியசாலை அபிவிருத்திச் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று இரவு 8.30 மணியளவில் அமைச்சரின் சம்மாந்துறை வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் சார்பில் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் அதன் செயலாளர் றியாத் ஏ.மஜீத், உப தலைவர் எம்.ஆதம், பொருளாளர் ஐ.எல்.ஏ.றாசிக், உறுப்பினர் நௌபர் ஏ. பாவா உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்;பில் கலந்து கொண்டனர்.

இதன்போது வைத்தியசாலை அபிவிருத்தி சபையினரால் வைத்தியசாலையின் தேவையாகவுள்ள வெளிநோயாளர் பிரிவினை விஸ்தரிப்பு செய்தல், சிற்றூண்டிச்சாலை நிர்மாணித்தல், விடுதிகளுக்கான திருத்த வேலைகள் மற்றும் இரத்தப் பரிசோதனை இயந்திரம் (டீடழழன யுயெடலணநச) பெற்றுக்கொள்ளல் போன்ற கோரிக்கைகள் மகஜராக அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மன்சூர், இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து உடன் நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளதாக வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் மன்சூரினை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top