( எஸ்.எம்.எம்.றம்ஸான்)

காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் திவிநெகும ஆறாம் கட்ட தேசிய அபிவிருத்தி நிகழ்வு இன்று காலை மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோஸ்தர் கே.ரூபியா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் உத்தியோஸ்தர் ஏ.எம்.ஜவ்பர் , பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவின் இணைப்பாளர் ஏ.எம்.ஜாஹிர் , பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் , மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் அப்துல் கபுர் , கிராம சேவக உத்தியோஸ்தர் எல்.பஹீரதன் , திவிநெகும அபிவிருத்தி உத்தியோஸ்தர் எம்.ஐ.ஸஹீதா , சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.அம்சார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மாளிகைக்காடு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளிகள் பலருக்கு பழமரக்கன்றுகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில்

திவிநெகும ( வாழ்வின் எழுச்சி ) தேசிய வேலைத்திட்டத்தின் ஆறாம் கட்டம் இன்று காலை   நாடு தழுவிய  ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

இதனை முன்னிட்டு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.இல்லியாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.சஹருன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரங்களை நாட்டினார்.

இந்நிகழ்வில்  ஆசிரியர்கள் , மாணவர்கள்  கலந்து கொண்டனர்.கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில்
( எஸ்.எம்.எம்.றம்ஸான்)

திவிநெகும ( வாழ்வின் எழுச்சி ) தேசிய வேலைத்திட்டத்தின்ஆறாம் கட்டம் இன்று காலை சுபநேரமான 10.07 மணிக்கு நாடுதழுவிய  ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின்தலைமையில் ஆரம்பமானது.
இதனை முன்னிட்டு கல்முனை வலயத்திற்குட்பட்ட முன்னணிபாடசாலைகளுள் ஒன்றான கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கல்லூரி அதிபர்பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில்மஹிந்தோதய தொழில்நுட்ப கூடத்தின் முன்னால்   மரம் நடும்நிகழ்வும், மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையிலும் , சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையிலும் , சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையிலும் , மாளிகைக்காடு பிரதியமைச்சர் சரத் வீரசேகரவின் இணைப்பாளர் அலுவலகத்திற்கு முன்னால் இணைப்பாளர் ஏ.எம்.ஜாஹிர் தலைமையிலும் மரம் நடும் நிகழ்வுகளும் பயிர் விதைகள் மற்றும் மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
” வளம் நிறைந்த இல்லம் சுபீட்சமான தாய்நாடு ” எனும்தொனிப்பொருளிலான இவ் வேலைத்திட்டத்தின் ஊடாககுடும்பங்களினது பொருளாதாரத்தையும் , போசாக்குமட்டத்தையும்  மேம்படுத்தி 25 இலட்சம் குடும்பங்களைவலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டு்ள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும்இவ்வேலைத்திட்டம் நாட்டிலுள்ள   331 பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  14022 கிராம சேவகர் பிரிவுகளிலும்முன்னெடுக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும்தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு 7 வகைகளை உள்ளடக்கியமரக்கறி  விதைப்பொதிகளும் , நான்கு வகைகளை உள்ளடக்கிய 9வகையான மரக்கறிக் கன்றுகள் என்பவற்றுடன் பச்சை மிளகாய் ,தக்காளி , கறி மிளகாய் , பழ வகைகள் , தென்னங்கன்றுகள் ,மருந்துக் கொடிகள் , அகத்தி உட்பட பலவிதமான கன்றுகள்வினியோகிக்கப்பட்டுள்ளன.
இதே வேளை திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்தமூன்றரை வருட காலப் பகுதியில் நாட்டில் 450 கோடி ருபாவிற்குமேல் பொருளாதார செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக திவிநெகுமதிட்ட மேலதிகப் பணிப்பாளர் நாயகம் ஜயதிலக ஹேரத்தெரிவித்தார்.கருத்துரையிடுக

 
Top