கல்முனை நகரில் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான முஸ்தீபுகள் இடம் பெறுவதாகவும் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் ,கல்முனை மாநகர முதல்வரும் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இன்று வெள்ளிக்கிழமை கல்முனை நகர்  ஜும்மா  பள்ளி வாசல் ஒலி  பெருக்கியில் விசேட அறிவிப்பு செய்யப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா  தொழுகை நிறைவு பெற்றதன் பின்னர்  பள்ளிவாசல் ஒலி  பெருக்கியில்  பள்ளிவாசல் இம்மாம்  மௌலவி இக்பாலினால்  இந்த அறிவிப்பு விடுக்கப் பட்டது .
கல்முனை நகர் பகுதியின்  வரலாற்றில் எந்தவொரு இடத்திலும் சிலை ஒன்று  இருந்ததாக வரலாறு இல்லை  ஆனால் சிலை ஒன்றை கல்முனை மாநகர சபை நினைவு சின்னமருகில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப் பட்டிருப்பதாகவும்  பாராளுமன்ற உறுப்பினரும்,முதல்வரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும்  இந்த விடயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயல் பட வேண்டும் என்றும் கல்முனை நகர ஜும்மா  பள்ளிவாசல்  நம்பிக்கையாளர் சபை தலைவர்   அறிவித்துள்ளதாக இந்த விசேட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டது.

இது தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர்  விடுத்திருக்கும் செய்தியில் இது ஒரு வதந்தியான அறிவித்தலாகும் . இதனை பொதுமக்கள் நம்பவேண்டாம்  அவ்வாறானதொரு ஏற்பாடு எதுவும் இல்லை என 
கல்முனை மாநகர முதல்வரின் ஊடக அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது 
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை நகர மத்தியில் புத்தர் சிலை நிறுவப்படவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
இது மக்கள் மத்தியில் பீதியையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வதந்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்முனை நகர பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இந்த சிலை வைப்பு விடயம் தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதாவது கல்முனை நகர மத்தியில் புத்தர் சிலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது விடயத்தில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து முதல்வரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை நகர மத்தியில் புத்தர் சிலை நிறுவப்படவிருப்பதாக கூறப்படும் வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடையத் தேவை இல்லை என்றும் முதல்வர்- நிஸாம் காரியப்பர் வேண்டுகோள் விடுக்கின்றார்.இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசை  தொடர்பு கொண்டு கேட்ட போது  இந்த விடயம் உண்மையோ பொய்யோ  என்பது ஒரு புறமிருக்க  இது ஆழமாக சிந்திக்க வேண்டியதொரு விடயமாகும்  . இது தொடர்பாக  விரிவாக ஆராய்ந்து வருகின்றேன்   விரைவாக அறிக்கையொன்றை வெளியிடவுள்ளேன் என அவர் தெரிவித்தார் 


கருத்துரையிடுக

 
Top