(சுரேஸ்)
“சம வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதனூடான இலகுவில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களுக்கான நிலையான அபிவிருத்தியை நோக்கிய வறுமைக் குறைப்பு”  எனும் செயற்திட்டத்தின் பிரகாரம் ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் கன்டிகப் இன்டர் நெசனல் நிறுவனங்களின் நிதியுதவியுடன் கமீட் அமைப்பு அமுல்ப்படுத்தும்  திட்டத்தின் கீழ் எகட் கரிதாஸ் அமைப்பின் சமூக ஊக்குவிப்பாளர்களுக்கான மாற்றுத்திறனாளிகளையும் அவர்களுக்காக சேவை புரிபவர்களையும் உள்வாங்கல் தொடர்பான ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு மட்டக்களப்பு கிறீன் கார்டின் தங்குமிட ஒன்றுகூடல் மண்டபத்தில் கமீட் அமைப்பின் உள்வாங்கல் தொடர்பான திட்ட உத்தியோகத்தா எஸ்.சக்தி தலைமையில் இன்று (29) நடைபெற்றது.
இப்பயிற்சியின் மட்டக்களப்பு எகட் கரிதாஸ் அமைப்பின் சார்பாக திட்ட உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள்,சமூக ஊக்குவிப்பாளர்கள் பலர்  கலந்து கொண்டுவலது குறைந்தோர்  என்றால் என்ன வலது குறைவின் வகைகள்,மொழியும் வலதுகுறைவும், தொடர்பாடல் மற்றும் உள்வாங்கல் போன்ற விடயங்கள் சம்மந்தமாகவும் அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார செயற்பாடுகளை மேம்படுத்த அறிவையும் திறண்களையும் வளர்த்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

 
Top