கல்முனையில்  வர்த்தக நிலையமொன்றை இரவு  நேரத்தில்  உடைத்து அங்கிருந்த சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிச் சென்ற மூன்று பேரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் திருடப் பட்ட பொருட்கள் மீட்கப் பட்டும் மற்றும் பொருட்களை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப் பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

களவாடப்பட்ட பொருட்களில் நவீன தொலைக் காட்சி பெட்டி , கணணி,மடிகணணி,புகைப்பட கருவி, ஐபேட், விலை மதிப்புள்ள கையடக்க தொலை பேசி என்பன அடங்கியுள்ளன.
கைது செய்யப்பட்ட கல்முனையைச் சேர்ந்த சந்தேக நபர் மூவரும் கல்முனை நீதிவான் நீதிபதி அந்தோனி ஜூட்சன் முன்னிலையில் திங்கட் கிழமை(20) பொலிஸார் முன்னிலைப் படுத்திய போது நவம்பர் 03 ஆந் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவு  அதிகாரி ஒருவர் இச்சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில் கடந்த 2014.10.08 ஆந் திகதி கல்முனையில் உள்ள இலத்திரனியல் விற்பனை நிலையமான சொப் லொஜிக் அன்று அதிகாலை 2.30 மணிக்கு உடைக்கப்பட்டு அங்கிருந்த 10இலட்சத்து 8ஆயிரத்து 637 ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன. 

வர்த்க நிலைய உரிமையாளரின் முறைப்பட்டுப் பிரகாரம் கல்முனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி பீ.ஏ. சோமகுமார, சார்ஜன் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணையை மேற் கொண்டனர். கல்முனையைச் சேர்ந்த ஜெகன் என்பருக்கு சொந்தமான          EP GL-8323 இலக்க லொறி வண்டியின் சாரதி  கல்முனையைச் சேர்ந்த  அபுல்கலாம் என்பவரும்,மற்றும்  சாஹூல் ஹமீட்(பாறுக்) என்பவரும், சாஹூல்ஹமீட் ஜஃபர் என்பரும் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.
களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த பொலிஸார் சந்தேக நபர் மூவரையும் கல்முனை நீதவான் நீதி மண்றில் முன்னிலைப் படுத்தி நீதிபதி அந்தோனி ஜூட்சன் அவர்களிடம் சந்தேக நபர் மூவரையும் மேலதிக விசாரணைக்காக  மேலதிக தடுப்பு வைப்புக் கட்டளையைப் பெற்றுக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து  வைத்து மேற் கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் பிரகாரம் களவாடப்பட்ட பொருட்களில் சிலவற்றையூம் களவூக்குப் பயன்படுத்தப்பட்ட குறித்த லொறி வண்டியையும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில்  மீண்டும் திங்கட் கிழமை(20) மூவரையும் நீதிவான் நீதி மன்றில் முன்னிலைப் படுத்திய போது நீதிபதி அந்தோனி ஜூட்சன் மூவருக்கும் எதிர் வரும் நவம்பர் 03 ஆந் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top