கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உளநலப் பிரிவு உலக உளநல தினம் தொடர்பான சிறப்பு நிகழ்வொன்றை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடத்தியது. 

'மனச்சிதைவு நோயுடன் உயிர்வாழ்தல்' எனும் கருப்பொருளுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.
 இன்று புதன்கிழமை நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் பிரதம அதிதியாகவும் பிராந்திய உதவி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இஸடீன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர். அதேவேளை, உளவள வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.ஜீ.எம்.ஜுராஜ், உள நல சிறப்புரையையும் உளவள வைத்திய அதிகாரி (புனர்வாழ்வு) டாக்டர் யூ.எல்.சராப்டீன், டாக்டர் எம்.ஜீ.ஏ.நௌபல் ஆகியோரும் உளநலத் துறை தொடர்பில் உரையாற்றினர்.

 இதேவேளை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உளநலப் பிரிவின் சேவைகளுக்கு இதுவரை பங்காற்றிய சுகாதார வைத்தியஅதிகாரிகள், பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பிரிவினர் நினைவுச் சின்னம் வழங்கி நிகழ்ச்சியில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உளநலப் பிரிவின் சேவைகளுக்கு ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவு உளநலப் பிரிவின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் பாதிக்கப்படும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் தாம் ஆவன செய்யவுள்ளதாக பணிப்பாளர் டாக்டர் அலாவுதீன் நிகழ்வில் உறுதியளித்தார்.

கருத்துரையிடுக

 
Top