( M.I.M.Azhar )
ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்பத்திற்கான நிறுவனம் கல்வியமைச்சுடன் இணைந்து தேசிய ரீதியில்  மாலபே கெம்பஸில் ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கணிணி மென்பொருள் ஆக்கப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் , மக்கள் தெரிவு போட்டியில் முதலாம் இடத்தையும் , தகவல் தொழில்நுட்ப புதிர்ப்போட்டியில் முதலாம் தரச் சான்றிதழையும் பெற்று கலந்து கொண்ட மாணவர்களும் பொறுப்பான ஆசிரியரும் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மென்பொருள் ஆக்கப் போட்டியில் பிலியந்தல மத்திய கல்லூரி முதலாம் இடத்தையும் , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் , மாத்தறை தெலிஜாவில மத்திய கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் , மக்கள் தெரிவு போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி 1375 வாக்குகளைப் பெற்று முதலாம் இடத்தையும் , கொழும்பு தேஸ்டன் கல்லூரி 1018 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் , பிலியந்தல மத்திய கல்லூரி 239 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
கிழக்கு மாகாணத்திலிருந்தும் அகில இலங்கை ரீதியிலும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுள் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாத்திரமே இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டது.



கருத்துரையிடுக

 
Top