ஊவா மாகாண சபையின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஊவா மாகாண சபையின் புதிய அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டவர்களின் விபரம் வருமாறு:-

சசேந்திர ராஜபக்ஷ -                நிதி திட்டமிடல், கல்வி ,உள்ளுராட்சி ,காணி ,கலாசாரம், சமூக சேவைகள் ,
                                                கிராமிய   பொது வசதிகள் அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்.

அனுர ரவீந்திர விதான கமகே - விவசாய ,நீர்ப்பாசன, கால்நடை, நன்னீர் மீன் வளர்ப்பு ,போக்குவரத்து
                                                  மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.

ஆர்.எம்.குமாரசிறி ரத்நாயக்க - சுகாதாரம் ,சுதேச வைத்தியத்துறை ,நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு
                                                மற்றும் மகளிர் விவாகர அமைச்சர்

செந்தில் தொண்டமான் -        பெருந்தெருக்கள் அபிவிருத்தி ,வீடமைப்பு ,நீர்வளங்கள் மற்றும் வடிகால்
                                             அமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்.

 சாமர சம்பத் தசநாயக்க -    விளையாட்டு இளைஞர் விவகார மின்சக்தி எரிசக்தி புடவைக் கைத்தொழில்
                                           மற்றும் சிறு கைத்தொழில் கூட்டுறவுத்துறை அமைச்சர்

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியின் முன்னலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட பின்னர் ஜனாதிபதியுடன் குழுப்படமும் எடுத்துக் கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top