(சுரேஸ்)
கல்விஅமைச்சின் வழிகாட்டல் ஆலோசனை அலகின் நிதியுதவியில் கிழக்குமாகாண கல்விதிணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 1ஏ.பீ, 1சீ பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கும் சேவையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 120 ஆசிரியர்களுக்கான தொழில் வழிகாட்டலை வலுவூட்டும் திட்டத்தின் கீழான முதற்கட்ட செயலமர்வு மட்டக்களப்பு புனித. தெரேசா பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கிழக்குமாகாண கல்விதிணைக்களத்தின் உள சமூக உதவிமுகாமையாளர்  ஏ.அரிதரன் தலைமையில் உத்தியோகபூர்வமாக நேற்று(25) ஆரம்பமாகி நடைபெற்றது.
இச் செயலமர்வின் பிரபலதொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தொழில்சார்  வழிகாட்டல் திட்டங்களை செயற்படுத்தி தொழிற்படைக்குள் கொண்டுசெல்லக் கூடிய பலவிடயங்கள் பயிற்றுவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. கருத்துரையிடுக

 
Top