(ஐ.எல்.றிஸான்)
அக்கரைப்பற்று பிரதேச சபை நிர்வாகப் பிரிவிலுள்ள பாடசாலைகளில் நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட  தொலைபேசி இணைப்புக்களை தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தவிசாளர்  எஸ். லாபீர்  அன்பளிப்புச் செய்தார் .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர்  ஏ. எல். எம். காசிமிடம், தவிசாளர்  லாபீர்  தொலைபேசிகளை வழங்கினார்  அக்கரைப்பற்று பாயிஷா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், வலயக் கல்விப்பணிப்பாளரிடமிருந்து பாயிஷா மகா வித்தியாலய அதிபர்  எம். ஏ. இஸ்ஸதீன், முகம்மதியா கனிஷ்ட கல்லூரி அதிபர்  எம். எச். பதுறுடீன் ஆகியோர்  தொலைபேசி பெற்றுக் கொண்டனர்  அர் - ரஹீமியா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிபர்  ஏ. எல். எம். செய்னுடீன் தொலைபேசி பெற்றனர்  , எஸ். லாபீர்  மற்றும் பாயிஷா வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டனா.கருத்துரையிடுக

 
Top