(சுரேஸ்)
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி கிராமத்தில் வாழும்  யுத்தத்தினாலும் பிறப்பினாலும் பாதிப்பிற்குள்ளான வலது குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வியலை மேம்படுத்தல் மற்றும் உளஆற்றுப்படுத்தல் தொடர்பான இரண்டுநாள் பயிற்சி நிகழ்வு  ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் கன்டிகப் இன்ரர்  நெசனல் நிறுவனத்தின் நிதியுதவியில் கமிட் அமைப்பின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கான உளஆற்றுப்படுத்தல் பயிற்சி கமிட் அமைப்பின் திட்டஉத்தியோகத்தர் எம்.ஜெயகுமார் தலைமையில் சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியின்  போது உள ஆற்றுப்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் உள வளத்துறையின் பயிற்றுவிப்பாளர்களான அ.ஜெயநாதன் மற்றும் ரி .விஸ்வஜிந்தன் ஆகியோர்  கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கையின் முன்னேற வேண்டியவளங்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் எவ்வாறன சவால்களை எதிர்  நோக்கி வெற்றி கொள்ளவேண்டும் என்பது பற்றி பயிற்றுவிப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

 
Top